2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

யாழில் வாள்வெட்டு;இளைஞர் படுகாயம்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 09 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் மீது திங்கட்கிழமை (08) அன்று காலை 10 மணியளவில் கயஸ் வாகனத்தில் வந்த இருவர் வாள் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த கொக்குவில் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய இளைஞன் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .

வாள்வெட்டிற்கான காரணம் இரு தரப்புக்கு இடையே காணப்பட்ட முற்பகையே என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .