2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

யாழில் விபச்சார விடுதி ; நால்வர் சிக்கினர்

Janu   / 2025 ஏப்ரல் 10 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று, பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு  அருகாமையில் உள்ள வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றே இவ்வாறு புதன்கிழமை (09) அன்று யாழ். மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. 

இதன்போது  குறித்த வீட்டின் உரிமையாளரான 68 வயதுடைய நபர் மற்றும்  அளவெட்டி, குருநகர், கொடிகாமம் போன்ற பிரதேசங்களை சேர்ந்த  40, 42, 53 வயதுடைய மூன்று பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் கைதான நால்வரையும் சாவகச்சேரி பொலிஸார் ஊடாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிதர்ஷன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .