2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

யாழ்,துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 21 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்  ஆரம்பகட்ட பணியில் பணியின் போது துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிப்பு ஊர் காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் சனிக்கிழமை (20) அன்று T56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான தகவல்கள் ஊர்காவற்றுறை  பொலிஸாருக்கு வழங்கப்பட்டது  இவ் விடயம் தொடர்பாக ஊர்காவற்றுறை  பொலிஸார் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று ரவைகளை மீட்டெடுப்பதற்கான மனுவை வழங்க உள்ளனர்  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர் காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

நிதர்சன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X