2025 மே 14, புதன்கிழமை

வடக்கில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

தமிழ் தேசியக்கட்சிகளின் ஒன்றிணைந்த எற்பாட்டில்  பேரினவாத அடக்குமுறைக்கு ஏதிராக மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை (03) யாழ்ப்பாணம் சுன்னாகம் மத்திய பேருந்து நிலையம், சந்தைப்பகுதியில் இருந்து ஆரம்பமாகியது.

குறித்த நிகழ்வு தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (புளொட்) தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டு பேரினவாத அடக்கு முறைக்கு ஏதிராக மனிதச்சங்கிலி போராட்டத்திற்கான துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வைத்தார்.

இதன்போது, வியாபார ஸ்தாபனங்கள், சந்தை நடத்துனர்கள், வாடிக்கையாளர்கள், பேரூந்து பயணிகளுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X