Editorial / 2025 டிசெம்பர் 29 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டிட அனுமதி பெறப்படாத வணிக நிலையங்களுக்கு ஒருவருட அவகாசம், பருத்தி துறை பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் உதயகுமார் யுக்தீஸ் தலைமையில் திங்கட்கிழமை (29) அன்று காலை 9:30 மணியளவில் இறைவணக்கத்துடன் ஆரம்பமானது.
இதில் சபையின் நிதி நடவடிக்கைக்கான அனுமதிகள் சபையிடம் பெறப்பட்டது. வட்டார அலுவலர்களுக்கான 20 சதவீத கொடுப்பனவுகள் வழங்குவதற்கான அனுமதி தொடர்பில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்று இறுதியில் சபையிடம் நிதி இல்லை என்றும் அதனை உரிய தரப்புக்கு அறிவிவிக்க தீர்மானிக்கப்பட்டது.
அனுமதி பெறப்படாமல் கட்டிடங்கள் கட்டியோருக்கு அதற்கான வியாபார அனுமதி வழங்க வேண்டாம் என்று ஆளுநரிடமிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டமையால் ஒருவருடத்திற்குள் கட்டிட அனுமதி பெறப்பட வேண்டும் என்றும், மருதங்கேணி பகுதியில் சபை அனுமதியின்றி தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்குவதாகவும் அதனை ஆய்வு செய்து சபையால் நடவடிக்கை எடுப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன்.
20 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago