2025 மே 21, புதன்கிழமை

வவுனியாவில் 1000 பேருக்கு லிட்ரோ எரிவாயு விநியோகம்

Freelancer   / 2022 ஜூலை 14 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

ஒரு மாதத்திற்கு பின்னர் வவுனியாவில் 1000 பேருக்கு சீரான முறையில் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள மைதானத்தில் வைத்து  சமையல் எரிவாயு விநியோகம் நேற்று இடம்பெற்றது.

லிற்றோ நிறுவனத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து அங்கு வருகை தந்திருந்த 1000 பேருக்கு சீரான முறையில் எந்தவித குழப்பங்களுமின்றி இலக்க சிட்டைகளை வழங்கி, பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மின்சார பட்டியல்கள் பதிவு செய்யப்பட்டு சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியாவில் ஒரு மாதத்திற்கு பின்னர் லிற்றோ சமையல் எரிவாயு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .