2025 மே 15, வியாழக்கிழமை

வவுனியாவில் 130 கடைகளுக்கு சிவப்பு அறிவித்தல்

Freelancer   / 2023 ஜூலை 10 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா நகரசபையினால் நிலவாடகை செலுத்தாத 130 வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

வவுனியா நகர சபையின் கீழ் 447 கடைகள் காணப்படுகின்றன. இவற்றில் கடந்த 2022ம் ஆண்டு தொடக்கம் பல வர்த்தக நிலையங்கள் நில வாடகை செலுத்தாத நிலையில் நகரசபையினால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன் முதற் கட்டமாக 86 கடைகள் கடந்த  புதன்கிழமையும்(05), 44 கடைகள் திங்கட்கிழமையும் (10)  சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளதுடன், வரும் நாட்களில் நில வாடகை செலுத்தாத ஏனைய வர்த்தக நிலையங்களிற்கும் இந்நடவடிக்கை தொடரவுள்ளது. 

மேலும் நகரசபையின் அனுமதியின்றி சிவப்பு அறிவித்தலினை அகற்றியமைக்காக  வர்த்தக நிலையங்களின் மீது வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதுவரை இந்நடவடிக்கையின் மூலமாக 3,806,921 ரூபாய் பணம் வருவாயாக நகரசபைக்கு  கிடைக்கப்பெற்றுள்ளது. 

குறிப்பாக வவுனியா நகரசபையினால் வர்த்தக நிலையங்களிற்கு 500 தொடக்கம் 6000 ரூபாய் வரையே வாடகை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை 2022இல் இருந்து செலுத்தாத காரணத்தினாலேயே வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .