Editorial / 2025 ஏப்ரல் 04 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியாவில் 15 கிலோ கிராம் கஞ்சா விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார், வியாழக்கிழமை (03) தெரிவித்தனர்.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா, கணேசபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 15 கிலோ கிராம் கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து, அதனை உடமையில் வைத்திருந்த 25 - 32 வயதுக்கு உட்பட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், கணேசபுரம், கூமாங்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் நெளுக்குளம் பொலிஸாரிடம் விசேட அதிரடிப் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
7 minute ago
35 minute ago
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
35 minute ago
13 May 2026
13 May 2026