2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

வீட்டிற்குள் புகுந்த வெங்கிணாந்தி பாம்பு

R.Tharaniya   / 2025 நவம்பர் 17 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் விளாத்திகுளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று காலை வீடு ஒன்றில் வெங்கிணாந்தி பாம்பு ஒன்று  புகுந்துள்ளது.

இதனை தொடர்ந்து வீட்டின் உரிமையாளர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்கள். குறித்த பகுதிக்கு விரைந்த முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த வீட்டிற்கு சென்று பாம்பினை பிடித்துள்ளானர்

8 அடி நீளம் கொண்ட குறித்த பாம்பை பிடித்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அதை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வவுனிக்குளம் சரணாலயத்தில் விட்டுள்ளார்கள். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X