R.Tharaniya / 2025 நவம்பர் 16 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பச்சிலைப்பள்ளி பளை பொது சந்தை கடந்த இரு தினங்களாக பெய்த கன மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி சந்தை நிலப்பரப்பு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது.
இதனால் பச்சிலைப்பள்ளி மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தினமும் பொதுத்தனசந்தைக்கு வருகை தருவது வழக்கமான விடயமாகும்.
ஞாயிற்றுக்கிழமை (16) மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் நெருக்கடியினை எதிர்நோக்கி வருகின்றனர்.
பொது சந்தை சுற்றுச்சூழல் முழுவதும் வெள்ளம் வியாபித்து காணப்படுவதால் மக்கள் தமது பயண ஒழுங்குகளையும் தமது வர்த்தக செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு வெள்ளம் இடையூறாக இருப்பதாகவும் பல தொற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் பச்சிலைப்பள்ளி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பச்சிலைப்பள்ளி பொதுச்சந்தையில் புனரமைப்பு வேலைகள் நடைபெறுவதோடு ஆங்காங்கே கட்டிட பொருட்கள் குவித்த வண்ணமும் இருப்பதாகவும் இவ்வேளை திட்டங்களை மிக விரைவில் நிவர்த்தி செய்து தருமாறு மக்கள்வேண்டி நிற்கின்றனர்.
பல காலமாக தாம் இப் பிரச்சினைக்கு முகம் கொடுப்பதாகவும் தமது பிரதேசத்தில் சிறிய அளவு மழை பெய்தாலும் பொதுச்சந்தை காணப்படும் பிரதேசத்தில் தாம் தமது அன்றாட செயற்பாடுகளை தொடர இடையூறாக இருப்பதாகவும் வெள்ளத்தினை கட்டுப்படுத்த ஏதாவது உடனடி நடவடிக்கையை செய்து தருமாறு மக்கள் கேட்டு நிற்கின்றனர்.



2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago