2021 மே 18, செவ்வாய்க்கிழமை

அட்டாளைச்சேனையில் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,ரீ.கே.றஹ்மத்துல்லா

உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதற்கிணங்க,'பாதுகாப்பான உணவு நிலையான விவசாயம்' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு அம்பாறை,அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பாலமுனை விவசாய கல்லூரியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதில், பிரதமஅதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ.அமீர், உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ்,விவசாய குழுத் தலைவர்கள், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .