2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

விடுமுறை நாட்களில் அரசாங்கத்திற்கு கிடைத்த பெரும் வருமானம்

Freelancer   / 2025 டிசெம்பர் 29 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வாகனப் போக்குவரத்து அதிகரித்ததால், அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி வருமானம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, டிசம்பர் 26ஆம் திகதி 58 மில்லியன் ரூபாயும், டிசம்பர் 27 ஆம் திகதியன்று 62 மில்லியன் ரூபாய் வருமானமும் ஈட்டப்பட்டது.

டிசம்பர் 28 அன்று 57 மில்லியன் ரூபாயும் வருமானமாகப் பெறப்பட்டது.

இதேவேளை, நத்தார் தினமான டிசம்பர் 25 அன்று 54 மில்லியன் ரூபாய் வருமானம் பதிவானமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X