2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

அதிபரின் இடமாற்றத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட ஒலுவில் அல்- ஹம்றா வித்தியாலய அதிபரின் இடமாற்றத்தைக் கண்டித்து, இன்றும் (07) இரண்டாவது நாளாகவும் பாடசாலையை மூடி, பெற்றோர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையால் பாசாலையின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிபரை இடமாற்றம் செய்து, புதிய அதிபர் ஒருவரை நியனம் செய்துள்ளமையைக் கண்டித்து, நேற்று (06) பெற்றோர்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்து, பாடசாலைக்கு மாணவர்களை அனுப்பாதிருந்ததுடன், பாடசாலையின் பிரதான நுளைவாயிலைப் பூட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த அதிபரின் 3 வருட கால சேவைக்கு 70 இக்கும் மேலான மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றுள்ளார்கள். இவரின் இடமாற்றத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனப் பெற்றோர் தெரிவித்தனர்.

ஒலுவிலில் அமைந்துள்ள பிரதான பாடசாலையான ஒலவில் அல்ஹ்மறா மகாவித்தியாலயத்தில் நேற்று (06)திகதி முதல் கடமையேற்கும் வண்ணம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சால் புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்புதிய அதிபர் கடமைப்பொறுப்புக்களை ஏற்பதற்கு முன்னர், பாடசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட பெற்றோர், பல்வேறுபட்ட எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--