2021 மே 08, சனிக்கிழமை

அளிக்கம்பையில் ஆசிரியர் தின நிகழ்வு

Niroshini   / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட அளிக்கம்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு  அதிபர் தேசமான்ய ஸ்ரீ மணிவண்ணன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன், ரி.கலையரசன், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், அருட்திரு தேவராஜ் பீரிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது,கல்வி அமைச்சரால் ஆசிரியர்கள் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அதிபரால் அமைச்சர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இதேவேளை, கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அமைச்சரால் பாடசாலைக்கான நிழற்பிரதி இயந்திரம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X