Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அறுகம்பை சுற்றுலாப் பிரதேசம் கடல் அரிப்புக் காரணமாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இங்குள்ள சுற்றுலாத்துறை விடுதி உரிமையாளர்களும் மீனவர்களும் தெரிவித்தனர்.
கடந்த ஒரு வாரகாலமாக அறுகம்பை கடற்கரையோரத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பினால் ஹோட்டல்கள், சுற்றுலாத்துறைக்கான பொலிஸ் பிரிவுக்கான நிலையம், மீனவர்வாடிகள், தென்னை மரங்கள் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் கூறினர்.
கரையோரத்தில் தங்களின் மீன்பிடி உபகரணங்களுடன் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதினால், இவற்றை வேறு இடத்துக்கு கொண்டுசெல்ல வேண்டியுள்ளதாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச மீனவர் சங்க சம்மேளனத்தின் பொருளாளர்; அலியார் மாபீர் தெரிவித்தார். எனவே, இந்தக் கடல் அரிப்பை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுற்றுலாத்துறை விடுதி உரிமையாளர்களும் மீனவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.எம்.முஸாரத்திடம் நேற்று புதன்கிழமை கேட்டபோது, இந்த கடல் அரிப்பு தொடர்பில் எவரும் பிபிரதேச செயலகத்தில் முறையிடவில்லை. இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைப்பின், பாதிப்பை பார்வையிட்டு இழப்பீட்டு நடவடிககை மற்றும் பாதுகாப்பு வசதிகளை கரையோரம் பேணல் திணைக்களத்தின் உதவியுடன் மேற்கொள்ளமுடியும்' எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
24 Feb 2021
24 Feb 2021