2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

இலவச கருத்தரங்கு

Niroshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

கூரியர் போய்ஸ் கொம் ஏற்பாட்டில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மருதமுனை பிரதேச மாணவர்களுக்கான கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களுக்கான இலவசக் கருத்தரங்கு இன்று (21) மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் கூரியர் போய்ஸ் கொம் இயக்குநர் காமிஸ் கலீஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில், கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார்.

இங்கு அவர் உரையாற்றுகையில்,

சர்வதேச மட்டத்தில் போதைப்பொருள் பாவனை,பாலியல் துஷ்பிரயோகம்,ஏனைய சமூக விரோத செயல்கள் மாணவர்களை இலக்காகக் கொண்டே முன்னெடுக்கப்டுகின்றன.

ஆகவே, மாணவர்களாகிய நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.பெற்றோர்களும் அதிபர்களும் ஆசிரியர்களும் நீங்கள் கல்வித்துறையில் நல்ல இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக பாடுபடுகின்றார்கள். இவர்களையெல்லாம் ஏமாற்றி விடாமல் மிகவும் கவனமாகப் படித்து நல்ல பெறுபேறுகளைப்பெற்று பெற்றோருக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.  

இந்தக் கருத்தரங்கில் அல்மனார் அதிபர் எம்.எம்.ஹிர்பஹான், வளவாளர்களாக எம்.எம்.அயாஸ் அகமட், ஏ.ஜே.தஸ்ரிப், ஜே.எம்.நிஸாத், ஏ.சி.சிறின் சித்தாரா,எம்.ஜெ சனோபர் கானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .