2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

கணித விநாடிவினாப் போட்டி 29இல்

Suganthini Ratnam   / 2016 மே 24 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கணித விநாடி வினாப் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும்; என அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு உட்பட்ட மாணவர்களே இப்போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை கோட்ட மாணவர்களுக்கான போட்டி அக்கரைப்பற்று அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயத்திலும் பொத்துவில் கோட்ட மாணவர்களுக்கான போட்டி பொத்துவில் இர்பான் மகளிர் கல்லூரியிலும் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .