2021 மே 10, திங்கட்கிழமை

காயத்திரி கிராமத்தில் நூலகம் திறந்து வைப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் நேற்று சனிக்கிழமை  நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

சமூக தரிசன ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

சமூக தரிசன ஒன்றியத்தின் தலைவர் கே.விநாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் பிரதம அதிதியாகவும் திருக்கோவில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த மற்றும் பலரும் கலந்துகொண்டார்.

இதன்போது திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் உள்ள முதியவர்கள் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X