2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

காலாவதியான பொருள் விற்ற வர்த்தகருக்கு அபராதம்

Gavitha   / 2016 மார்ச் 17 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பிரதேசத்தில் பிரபல வர்த்தக நிலையமொன்றில் நுகர்வோருக்கு பொருத்தமில்லாமல் காலவதியான பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் ஒருவருக்கு, 20 ஆயிரம் அபராதம் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய நளினி கந்தசாமி  செவ்வாய்க்கிழமை  (15) தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது, குறித்த வர்த்தக நிலையத்தின் காலவதியான பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த வேளையிலேயே, குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டு  விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய நளினி கந்தசாமி முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (15) எடுத்துக் கொள்ளப்பட்ட போது, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

அத்துடன் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் வர்த்தக நிலையங்களில் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது, 12 வர்த்தக நிலயங்களில் காலவதியான, நுகர்வுக்கு பொருத்தமில்லாத மற்றும் விலைப்பட்டியல்களை காட்சிபடுத்தலாத குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு, தலா 05 ஆயிரம் ரூபாய், 06 ஆயிரம் ரூபாய், 07 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .