2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருது பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரியாக ஹாரூன் நியமனம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 நவம்பர் 22 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரியாக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம்.ஹாரூன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை, புதன்கிழமை (20) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஜீ.எஸ்.நந்த திலக்க, மாகாண நிர்வாக உத்தியோகத்தர் பி.தியாகராஜா, மாகாண நிதிப் பொறுப்பாளர் எஸ்.குனசேகர, ஒய்வுபெற்ற உதவிப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.லத்தீப், மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.முபாறக் அலி உட்பட இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், போதனாசிரியர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த எஸ்.எம்.ஏ.லத்தீப் ஒய்வு பெற்றதையடுத்தே, அவ்வெற்றிடத்துக்கு ஹாரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .