2021 மார்ச் 01, திங்கட்கிழமை

‘சிறுபான்மையினர் ஏற்கும் புதிய அரசமைப்பு வேண்டும்’

Editorial   / 2017 ஜூலை 19 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய அரசியல் திர்வுத்திட்டம் வரவேற்கத்தக்கதாகும். எனினும், சிறுபான்மைச் சமூகங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாக, இந்தத் திட்டம் அமைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்” என, முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளர் அஸ்வான் மௌலானா தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,

“காலம் காலமாக, எமது நாட்டில் சிறுபான்மைச் சமூகங்கள் நசுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வாழ்ந்து வருவதையே நாம் காண்கிறோம். இந்நிலையில், புதிதாகத் தயாரிக்கப்பட்டு வரும் புதிய அரசமைப்பானது, அனைத்து இனத்தவர்களது ஒற்றுமைக்கும் சமத்துவத்துக்கும் வழிகோல வேண்டும்.

“தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், 30 வருடங்களாக அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். அந்தப் போராட்டத்தின் மூலம், தமிழ்ச் சமூகம், அரச படைகளால் அழித்து ஒழிக்கப்பட்டது.

“அதற்கு அப்பால், முஸ்லிம் சமூகமும் தற்போது, பெரும்பான்மை சமூகத்தால் நசுக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருகின்றது. இவ்வாறான சம்பவங்கள், இன்று நேற்று மட்டுமல்ல, காலம் காலமாக நடந்தேறி வருகின்றன.

“எனவே, புதிய அரசு கொண்டுவரவுள்ள அரசமைப்புத் தீர்வுத்திட்டம், அனைத்தினச் சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வாக அமைய வேண்டும். அதேவேளை, சிறுபான்மைச் சமூகங்கள் பாதிக்கப்படாதவாறும், இத்திட்டம் அமைய வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .