2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

சுயதொழில் உதவி

Suganthini Ratnam   / 2016 ஜூலை 12 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட 56 குடும்பங்களுக்கு சுயதொழில் மேம்பாட்டுக்கான உபகரணங்கள் அப்பிரதேச செயலகத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை  வழங்கப்பட்டன.

இதன்போது, குடும்பம் ஒன்றுக்கு 20,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை சுயதொழிலுக்கான  உபகரணங்களான சைக்கிள்கள், சமையல் எரிவாயு அடுப்புகள், தைய்யல் இயந்திரங்கள், இட்லி அவிக்கும் பாத்திரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

ஐக்கிய நாடுகளுக்கான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடனும்; சுவாட் நிறுவனத்தின் அனுசரனையுடனும் இந்த உதவி வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .