2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

சாய்ந்தமருதில் அ.இ.மா.கா.வின் கிளைகள்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 17 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அங்கத்துவ வாரத்தை முன்னிட்டு அம்பாறை, சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் அக்கட்சியின் கிளைகள் நிறுவப்பட்டு வருகின்றன.

அ.இ.ம.காங்கிரஸின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் முன்னிலையில் சாய்ந்தமருது -09, சாய்ந்தமருது-11ஆம் பிரிவுகளுக்கான கட்சிக் கிளைகள் புதன்கிழமை (16) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. இதன்போது அவற்றுக்கான நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதற்கு முன்னர் சாய்ந்தமருது -05ஆம் 07ஆம் பிரிவுகளுக்கான கிளைகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அ.இ.ம.கா கட்சிக்கு நாடு பூராகவும் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக கடந்த 13ஆம் திகதி முதல் நாளை வெள்ளிக்கிழமை வரை அங்கத்துவ வாரமாக பிரகடனம் செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X