2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் கைது

Niroshini   / 2016 மார்ச் 04 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவில் 14 வயது சிறுமியை கடந்த மூன்று மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த 35 வயது சந்தேக நபர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் திருக்கோவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபர் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை குறித்த சிறுமியுடன் இவர் இருந்தபோது, சிறுமியின் தாயார் கண்டுள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் தாயார் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததை அடுத்து, குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--