2021 மே 12, புதன்கிழமை

'சிவில் குழுக்கள் அளப்பரிய சேவையை வழங்கி வருகின்றன'

Niroshini   / 2015 நவம்பர் 23 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

-எம்.சி.அன்சார்

பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தி கிராம மட்டத்தில் இடம்பெறுகின்ற சமூக விரோத செயற்களை இல்லாமல் செய்து, மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதில் சிவில் குழுக்கள் அளப்பரிய சேவையை வழங்கி வருகின்றன என கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.எம்.கே. காமினி தென்னக்கோன் தெரிவித்தார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் சேவை பிரிவின் ஏற்பாட்டில் கிராம மட்டத்தில்  குற்றச் செயல்களை எவ்வாறு குறைப்பது சம்பந்தமாக சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கான ஆலோசனைக் கூட்டமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் பிரியலால் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே,

பொலிஸாரின் அனுமதியுடன் அவர்களின் வழிகாட்டலிலும் கிராம மட்டத்தில் இயங்கிவரும் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களின் நல்ல எண்ணத்துடனும் தியாக மனப்பாங்கோடும் செயற்பட்டால் அர்த்தமில்லாத பிணக்குகளை உண்டாக்கின்ற பாமர மக்கள் பொலிஸ் நிலையத்துக்கோ நீதிமன்றத்துக்கோ செல்கின்ற நிலைமையை கட்டுப்படுத்தலாம் என்றார்.

இங்கு கிராம மட்டத்தில் எவ்வாறு சிறுகுற்றங்களை தடுப்பது, வீதி போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது, எவ்வாறு குற்றச்செயல்களை தடுப்பது சம்பந்தமாக சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், சிவில் பாதுகாப்புக் குழுக்களின் தலைவர் ஐ.ஏ. ஜப்பார், சம்மாந்துறை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் சேவை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.அமீர், கெப்சோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் காமில் இம்டாட் உட்பட பலர் கலந்த கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .