Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான்
கடந்த கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் பணிமனையின் சார்பில் தோடம்பழச் சின்னத்தில் போட்டியிட்டு, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம் உட்பட பலர், தேசிய காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்கள்.
மாளிகைக்காடு, பேர்லஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (01) மாலை நடைபெற்ற மக்கள் பணிமனையின் ஊடக சந்திப்பிலையே, மேற்படி அறிவித்தலை வெளியிட்டனர்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் தலைமையிலான தேசிய காங்கிரஸில் இணைந்து, அரசியல் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபடப்போவதாக, தோடம்பழச் சின்னத்தில் போட்டியிட்டு, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட மேற்படி உறுப்பினர்கள் வாக்குறுதி வழங்கினார்கள்.
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago