2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

Editorial   / 2020 மார்ச் 13 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 13ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார்,  இன்று வெள்ளிக்கிழமை (13) தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, பல்கலைக்கழகங்கள் நாளை சனிக்கிழமை (14) முதல் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானத்துக்கு இனங்க தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தையும் இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எதிர்வரும் 16, 17 ஆம் திகதிகளில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 13ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X