2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கதிரையில் பலவந்தமாக அமர்ந்த வைத்தியருக்கு சிக்கல்

Freelancer   / 2025 ஜூலை 14 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்  அலுவலகத்திற்குள் இன்று (14) காலை வலுக்கட்டாயமாக நுழைந்து அவரது நாற்காலியில் அமர்ந்த ஒரு பெண், மனநல சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

குறித்த பெண் தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு சுகாதார நிறுவனத்தில் பணிபுரியும் வைத்தியர் என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின்   அலுவலகத்திற்கு வந்த அந்த பெண், பிரதிப் பணிப்பாளர் நாயகத்தை அச்சுறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

பிரதிப் பணிப்பாளர் நாயகம், தனது இருக்கையை விட்டு வெளியேறியவுடன், அந்த  இருக்கையில் அமர்ந்த வைத்தியர் தனது கடமைகளை முறையாகச் செய்ய முடியாவிட்டால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூச்சலிட்டதாக வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

வைத்தியசாலை அதிகாரிகள் வந்து வைத்தியரை தேசிய வைத்தியசாலையின் மனநலப் பிரிவுக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். 

அவருக்கு மனநலப் பிரச்சினை உள்ளதா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .