2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக் காரியாலயம் பிரிக்கின்றமையை கண்டித்து பேரணி

Suganthini Ratnam   / 2016 மார்ச் 17 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்று நீர்வழங்கல் வடிகாலமைப்புச்  அதிகார சபையின் பிராந்தியக் காரியாலயத்தை இரண்டாகப் பிரித்து கல்முனைக்கு கொண்டுபோவதைக் கண்டித்து அக்கரைப்பற்று நகரப் பள்ளிவாசலுக்கு முன்பாக நாளை வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையின் பின்னர் அமைதிக்; கண்டனப் பேரணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த கண்டனப் பேரணியை மேற்கொள்வதற்கு  அக்கரைப்பற்று அனைத்துப் பள்வாசல்கள் சம்மேளனம் தீர்மானித்துள்ளதாக அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ், இன்று வியாழக்கிழமை  தெரிவித்தார்.

அக்கரைப்பற்று நீர்வழங்கல்; வடிகாலமைப்பு அதிகார சபையின் பிராந்தியக் காரியாலயத்தை இரண்டாக உடைத்து கல்முனைக்குக் கொண்டு செல்லும் சதி முயற்சியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றது. இதனைத் தடுப்பதற்கும் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தும் வகையிலும் இந்தக் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த கண்டனப் பேரணி தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவிக்கையில், 'இந்தக் கண்டனப் பேரணி தொடர்பான அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்களின் தீர்மானம் தவறானது. இது தொடர்பில் சம்மேளனத்தின் நிர்வாகிகள் தன்னிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர்' என்றார்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X