2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

’பொத்துவிலுக்கும் சதொச வருகிறது’

Yuganthini   / 2017 ஜூன் 08 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

பொத்துவில் பிரதேசத்தில், எதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு, சதொச விற்பனை நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் எம். அப்துல் மஜீட், இன்று (08) தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, சதொச விற்பனை நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.

அத்துடன், பொத்துவில் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மத்திய வீதியின் அபிவிருத்திப் பணிகளையும் பொத்துவில் ஜெய்க்கா வீட்டுத் திடடத்துக்காக குடிநீர் விநியோகத் திட்டம், பாடசாலைகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் அமைச்சர் அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .