2026 ஜனவரி 12, திங்கட்கிழமை

வடக்கு ரயில் மார்க்கத்தின் புனரமைப்பு பணி ஆரம்பம்

Freelancer   / 2026 ஜனவரி 12 , மு.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நிதியுதவியில் வடக்கு ரயில் மார்க்கத்தின் முதற்கட்ட புனரமைப்பு பணிகள் நேற்று (11) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் வடக்கு ரயில் மார்க்த்தின் பாதை பாரியளவில் சேதமடைந்திருந்தது.

எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் வடக்கு ரயில் மார்க்கத்தின் மஹவ முதல் ஓமந்தை வரையான ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

இந்திய நிதியுதவி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்காக 05 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .