Suganthini Ratnam / 2017 ஜூன் 14 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அட்டாளைச்சேனைக் கல்விக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயிலுநர் ஆசிரிய மாணவர்களுக்கான பதிவுகள், எதிர்வரும் 20ஆம், 21ஆம், 22ஆம் திகதிகளில் அக்கல்லூரியில் மேற்கொள்ளப்படவுள்ளது என, அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தெரிவித்தார்.
ஆரம்பக் கற்கைநெறிக்கு 125 பேரும் விஞ்ஞானப் பாடத்துக்கு 40 பேரும் கணித பாடத்துக்கு 20 பேரும் இஸ்லாமிய பாடத்துக்கு 25 பேரும் விசேட கல்விப் பிரிவுக்கு 15 பேருமாக, மொத்தம் 225 பேர் இம்முறை தெரிவாகியுள்ளனர்.
இவர்களுக்கான வகுப்பு, எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025