Niroshini / 2016 மார்ச் 23 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கனகராசா சரவணன்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் சட்டத்தரணியின் பிரேத பரிசோதனையில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் பக்கசார்பாக விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவர் தலைமையில், மீண்டும் இன்று புதன்கிழமை(23) பிரேத பரிசோதனை மற்றும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அக்கரைப்பற்று-07ஆம் பிரிவு கலாசார மண்டப வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய லோகராஜா நிதர்ஷினி என்ற பெண் சட்டத்தரணி, திங்கட்கிழமை(21) இரவு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர். சடலம் குறித்த பெண் சட்டதரணியின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் பக்கசார்பாக நடைபெற்றதாகக் கிடைத்த தகவலையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, அவர் தலைமையில் மீண்டும் சடலம், இன்று அம்பாறை போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.
1 hours ago
1 hours ago
15 Nov 2025
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
15 Nov 2025
15 Nov 2025