2021 மார்ச் 03, புதன்கிழமை

'பொய்யான செய்தி வெளியிட்டுள்ள‌மை க‌ண்டிக்க‌த்த‌க்க‌து'

Niroshini   / 2016 மே 24 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா,எஸ்.அஷ்ரப்கான்

வெல்ல‌ம்பிட்டி அன‌ர்த்த‌த்தில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை மீட்டெடுப்ப‌தில் ச‌ம‌ய‌ வேற்பாடு பார்க்க‌ப்ப‌ட்ட‌தாக‌ சில‌ ஊட‌க‌ங்க‌ள் பொய்யான செய்தி வெளியிட்டுள்ள‌மை க‌ண்டிக்க‌த்த‌க்க‌தாகும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் மௌல‌வி தெரிவித்தார்.

க‌ல்முனையில் ந‌டைபெற்ற‌ க‌ட்சியின் ஊட‌க‌ மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,

“வெல்ல‌ம்பிட்டி அன‌ர்த்த‌த்தின் போது அர‌சாங்க‌த்தின் இராணுவ‌ம் த‌விர‌ வேறு எந்த‌ நிறுவ‌ன‌மும் உத‌வ‌ முன்வ‌ராத‌ நிலையில் ஸ்ரீ ல‌ங்கா த‌வ்ஹீத் ஜ‌மா அத் ம‌ட்டுமே முத‌லில் க‌ள‌மிற‌ங்கி ம‌க்க‌ளை வெள்ள‌த்திலிருந்து வெளியேற்றுவ‌தில் முனைப்புட‌ன் செய‌ற்ப‌ட்ட‌து என்ப‌து அனைவ‌ருக்கும் தெரியும். இந்த‌ நிலையில் மேற்ப‌டி த‌வ்ஹீத் ஜமா அத் ம‌க்க‌ளை மீட்கும் ப‌ணியில் ஈடுப‌ட்ட‌ போது  முஸ்லிம்க‌ளை ம‌ட்டுமே மீட்ட‌தாக‌ சில‌ சிங்க‌ள‌ த‌மிழ் ஊட‌க‌ங்க‌ள் செய்தி வெளியிட்டிருப்ப‌து உண்மைக்கு புற‌ம்பான‌தும் இன‌ங்க‌ளுக்கிடையில் க‌ச‌ப்பை ஏற்ப‌டுத்தும் நோக்கில் உள்ள‌தாக‌வே உல‌மா கட்சி பார்க்கிற‌து.

மேற்ப‌டி அன‌ர்த்த‌த்தின் போது எத்த‌கைய‌ இன‌ பேத‌மும் பாராம‌ல் ஸ்ரீ ல‌ங்கா த‌வ்ஹீத் ஜ‌மா அத் செய‌ற்ப‌ட்ட‌த‌ற்கான‌ விடியோ ஆதார‌ங்க‌ள் உள்ள‌ன‌.

ஆக‌வே, வெள்ள‌ அன‌ர்த‌த்தில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை இன‌ ரீதிய‌மாக‌ பிரிப்ப‌தோ அவ‌ர்க‌ள் ம‌த்தியில் இன‌ முர‌ண்பாடுக‌ளை ஏற்ப‌டுத்த‌ யாரும் முய‌ற்சிக்க‌ வேண்டாம் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .