2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

முகாமையாளர் கொலை:சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Niroshini   / 2016 மார்ச் 28 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை சர்வோதய நிதி நிறுவனத்தின் பெண் முகாமையாளரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக்  இன்று  திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி, குறித்த நிறுவனத்தில் கடமையில் இருந்த முகாமையாளர் சுலக்சனா வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அன்றைய தினம், அந்நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சந்தேக நபர் மீண்டும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை ஆஜர் செய்தபோதே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X