Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 27 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
தமிழர்களின் பிரச்சினைகள் மட்டுமன்றி, முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கக்கூடியளவுக்கு புதிய அரசியல் சீர்திருத்த ஆலோசனைகளை புதிய அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்வதற்கு தேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.அப்துல் கபூர் தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'புதிய அரசியலமைப்பு சட்டவாக்கம் சம்பந்தமாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்ச் சமூகத்தின் பிரச்சினைகளையும் தேவைகளையும் மாத்திரம் சேர்;த்துக்கொள்வது தொடர்பில் பேசிவருவதை அறியமுடிகின்றது. இன்னுமொரு சிறுபான்மைச் சமூகம் இந்த நாட்டில் வாழ்கின்றது. அந்தச் சமூகத்துக்கும் இந்த நாட்டில் பிரச்சினைகள் உள்ளன. அந்தச் சமூகத்தின் பிரச்சினைகளையும் அரசியலமைப்புச் சபை கவனத்திற்கொள்ள வேண்டும். அதைப் பற்றி தமிழ்த் தலைமைகள் மனம் திறந்து பேசாமலிருப்பது கவலையளிக்கின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'புதிய அரசியல் சீர்;திருத்தம் பற்றி முஸ்லிம்; கட்சிகளின் தலைமைகளோ அல்லது அந்தச் சமூகத்தின் புத்திஜீவிகளோ தமிழ் அரசியல் தலைமைகளைப் போன்று அதிக அக்கறை காட்டுவதில்லை. அமைச்சர்; மற்றும் பிரதி அமைச்சர்;கள் பதவிகளை பெற்றுக்கொள்வதிலேயே முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் அக்கறையுடன் சிந்திக்கின்றனர்;.
நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்றவகையில் அரசியலமைப்பு திருத்தியமைக்கப்பட வேண்டுமென்பதை எல்லாச் சமூகத்தவர்;களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அரசியலமைப்புச் சபையில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் ஒன்றாக சேர்ந்து தத்தமது பங்களிப்பை மனமகிழ்வுடன் செய்வதற்கு முன்வரவேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 hours ago
9 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
14 Nov 2025
14 Nov 2025