2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

விபத்தில் குழந்தை உட்பட நால்வர் படுகாயம்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 ஜூலை 25 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - அக்கரைப்பற்று பிரதான வீதியின் 2ஆம் கட்டையில் இன்று (25) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 வயது ஆண் குழந்தையொன்று மற்றும் அக்குழந்தையின் தாய் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனரென, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வானொன்று, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளாண்மை அறுவடை இயந்திரத்துடன் மோதியமையினால், இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமம், ஜெயிலானி பகுதிக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்களே, இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் எம்.சில்மி (வயது 29 – குழந்தையின் தாய்) என்பவர் கடுமையான உபாதைக்குள்ளாகிய நிலையில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்த ஏனையவர்கள், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை, அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .