2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

16 வயது சிறுமி கர்ப்பம்: 65 வயது நபர் விளக்கமறியலில்

Kogilavani   / 2016 மார்ச் 25 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.தாஜகான்

பொத்துவில் கோமாரி பகுதியில், 16 வயது சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்த குற்றச்சாட்டில் கைதான 65 வயது நபரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சிறுமி கடந்த 6 மாதங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22 ஆம் திகதி சிறுமி மயக்கமுற்று விழுந்த நிலையில்  கோமாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் சிறுமி கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அது தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின்போதே சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்படி நபரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .