Editorial / 2026 ஜனவரி 07 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒரு பாடசாலையில் கணித ஆசிரியையாக பணிபுரிந்த 31 வயதான ஆசிரியை ஒருவர் 2 மாணவர்களுடன் தகாத உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விடயம் அறிந்த பாடசாலை நிர்வாகம் உடனடியாக அவரை பணியிடை நீக்கம் செய்தது. மேலும் சிறுவர்களின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் குறித்த ஆசிரியையை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேலையில் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது அந்த 2 பேரையும் வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததும், அதில் ஒரு சிறுவன் மூலம் ஆசிரியை குழந்தை பெற்று கொண்டதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவருக்கு கடந்த 2024-ம் ஆண்டு 6 1/2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்தநிலையில் மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியை வாழ்நாள் முழுவதும் ஆசிரியை பணியில் ஈடுபட தடை விதித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
52 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago