2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

வெனிசுலாவில் 14 ஊடகவியளாலர்கள் கைது

Janu   / 2026 ஜனவரி 08 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க இராணுவ படைகள் வெனிசுலா தலைநகரை தாக்கி, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்ததையடுத்து ஏற்பட்ட நிலைமை குறித்து  செய்தி வெளியிட்ட 14 ஊடகவியலாளர்களை வெனிசுலா அரசாங்கம் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஊடகவியளாலர்களில் ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும் வெளிநாட்டு ஊடக அமைப்புகளுடன் தொடர்புடைய ஊடகவியளாலர்கள் என வெனிசுலா ஊடகத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடும் விசாரணைகளுக்கு பிறகு சில ஊடகவியளாலர்கள் விடுவிக்கப்பட்டதுடன் , அவர்களில் ஒருவரை நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெனிசுலா ஊடகத் தொழிலாளர் சங்கம்  தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .