Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, மத்தியமுகாம் 11ஆம் கொலணிப் பிரதேசத்தில் வளர்ப்பு மகளை அடித்துக் கொலை செய்த சந்தேக நபரான தாயாரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் இன்று வெள்ளிக்கிழமை (09) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் (31) தாய்க்கும் மகளுக்கும் இடையில் மதம் மாறியமை தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தாய் கட்டில் பலகையால் மகள் மீது தாக்கியுள்ளார். இந்நிலையில், சம்பவ இடத்தில் உயிரிழந்த மகளின் சடலத்தை வீட்டின் பின்புறத்தில் கிடங்கு வெட்டி தாய் புதைத்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்தது.
தனது வளர்ப்பு மகளான செல்வநாயகம் ஜனனி (வயது 21) என்பவரை அடித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தை புதைத்த சம்பவத்தை தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் அம்மகளின் தாய் (வயது 55) சந்தேகத்தின் பேரில் தாயார் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்.
20 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
50 minute ago