2021 மே 18, செவ்வாய்க்கிழமை

வீடுகளை வழங்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 18 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனை பிரதேச செயலாளர்; பிரிவுக்குட்பட்ட மருதமுனை மேட்டுவட்டையில் நிர்மாணிக்கப்பட்ட சுனாமி வீட்டுத்திட்டத்தில் எஞ்சியுள்ள 81 வீடுகளையும் உரிய பயனாளிகளுக்கு விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேச செயலாளர் எம்.எச்.அப்துல் கனி  புதன்கிழமை தெரிவித்தார்.

இதற்கான நேர்முகப் பரீட்சை அம்பாறை மாவட்ட செயலகத்தினால் கடந்த மாதம் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த வீட்டுத்திட்டத்தில் மொத்தமாக 177 வீடுகள் கட்டப்பட்டன. ஒவ்வொரு வீடும் சகல வசதிகளுடனும் சுமார் 10 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. ஏற்கெனவே 96 வீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்நிலையில், எஞ்சிய வீடுகளையே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .