2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

வைத்தியருக்கு முதுமானிப்பட்டம்

Niroshini   / 2016 மார்ச் 11 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யூ.எல். மப்றூக்

அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர், ஆயுர்வேத வைத்திய நிலையங்கள் தொடர்பான நிருவாக விஞ்ஞான முதுமானிப் பட்டம் பெறவுள்ளார்.

மேற்படி முதுமானிப் பட்டம் பெறும், முதலாவது அரச யூனானி முஸ்லிம் மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பட்டமளிப்பு விழாவில், இவருக்கான பட்டம் வழங்கப்படவுள்ளது.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த டொக்டர் கே.எல். நக்பர், சுகாதார மற்றும் சுதேச மருத்துவ பிரதியமைச்சின் சுதேச மருத்துவப் பிரிவுக்கான நிபுணத்துவ ஆலோசகராகவும் கடமையாற்றுகின்றார்.

கனிணி விஞ்ஞானத்துறையிலும் இவர் முதுமானிப்பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--