Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கடந்த பத்து மாதங்களுக்குள் 49பேர் குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபட்டும் இருவர் மரணமடைந்தும் உள்ளனர் என கல்முனை வாகனப் போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவிக்கின்றார்.
கல்முனை பொலிஸ் நிலையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்குள் ஜனவரி மாதம் முதல் இன்றுவரை மதுபானம் அருந்தி போக்குவரத்துச் சட்டத்தை மதிக்காது வானம் ஓட்டிய 49 சாரதிகளை கைது செய்து கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ள அதேவேளையில், இரண்டு நபர்கள் குடிபோதையில் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி மின்கம்பத்தில் மோதி நீலாவனைப் பகுதில் உயிரிழந்துமுள்ளனர்.
வாகனம் ஓட்டுவதற்கு நிதானமும் தைரியமும் அவதானமும் வேண்டும். மதுபானம் அருந்திய ஒருவரிடம் நிச்சயமாக இவைகள் இருக்க முடியாது. இந்நிலையில் எப்படி வாகனத்தை அவர் ஓட்டுவார். அப்படி மீறி வாகனத்தை ஓட்டினால் விபத்துதான் ஏற்படும். ஆகவே இவ்விடயத்தில் சாரதிகள் மிகக்கவனமாக இருக்க வேண்டும் என தமிழ்மிரருக்கு கல்முனை பொலிஸ் வாகன போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.காமினி மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
6 hours ago