Super User / 2010 நவம்பர் 04 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 11 ஆம் திகதி 2,000 மரக்கன்றுகளை நடுவதற்குத் தாம் திட்டமிட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர் தெரிவித்தனர்.
இந்தவகையில், அட்டாளைச்சேனை, தைக்கா நகரிலிருந்து களியோடைப் பகுதி வரையிலான பிரதான வீதியின் இரு மருங்குகள், பாவங்காய் வீதி தொடக்கம் ஆலங்குளம் வரையிலான வீதியோரங்கள் மற்றும் ஒலுவில் பிரதான வீதியிலிருந்து அஷ்ரப் நகர் வரையிலான வீதிகள் வரை மரங்கள் நடப்படவுள்ளன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பகுதிகளுக்குட்பட்ட கிராம சேவகர் அலுவலகங்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் காரியாலயங்கள் உள்ளிட்ட அரச காரியாலயங்களிலும் இந்த மரநடுகைத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி, 11 நிமிடங்களுக்குள் நாட்டில் 11 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
8 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
31 minute ago
1 hours ago