2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)                                                           

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு சாய்ந்தமருது கரைவாகு வட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வொலிவேரியன் வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளை ஆராயும் கலந்துரையாடலொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுடன்  கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்றது.

வீட்டுத்திட்டத்திற்கான குடிநீர் வழங்குதல், பாடசாலை வசதி, எஞ்சியுள்ளோருக்கான வீடமைப்பு, சிறுவர் பூங்கா அமைத்தல், இளைஞர் யுவதிகளுக்கான தொழில்பயிற்சி, பல்தேவை கட்டிடம் போன்ற விடயங்கள் சம்பந்தமாகவும் இக் கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டன. இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலும் கலந்து கொண்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--