2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

யுவதிகளுக்கு ஆடை அலங்கரிப்பு பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை முஸ்லிம் தமிழ் பிரதேச செயலகங்களுக்குட்பட்ட யுவதிகளுக்கான ஆடை அலங்கரிப்பு செயலமர்வும் கண்காட்சியும் நேற்று கல்முனை  தமிழ் பிரதேச செயலக கட்டிடத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு ஆடை உற்பத்தியில் ஈடுபடும் யுவதிகளுக்கு ஆடையலங்காரம், சித்திர வேலைப்பாடு ஸ்டென்சில் அச்சு முறை, மெழுகுவர்த்தி அலங்காரம் ரிபன் அலங்காரம், பொம்மை வடிவமைப்பு போன்றவற்றில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

கல்முனை முஸ்லிம் தமிழ் பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் சமூர்த்தி உத்தியோகத்தர்களின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், பெலிஸ்டியன் நிறுவனத்தின் வளவாளர் அமரசிங்க ராஹு பத்த கலந்து கொண்டு பயிற்சி நெறியை நடத்தினார்.

இதில் மூவின மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .