2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

அதிரடிப் படையினர் இரத்த தானம்

Super User   / 2010 ஒக்டோபர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிலவும் குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் காரைதீவு விசேட அதிரடிப் படை வீரர்கள் ஒழுங்கு செய்திருந்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இன்று காலை கல்முனை வாடி வீட்டு வீதியிலுள்ள கல்முனை விசேட அதிரடிப்படை முகாமில் இடம்பெற்றது.

காரைதீவு விசேட அதிரடிப் படை முகாம் பொறுப்பதிகாரி பந்துல பெர்னாண்டோ தலைமையில்  இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

அண்மையில் சர்ச்சைக்குள்ளான இவ்வைத்திய சாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு வசதியாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே இந்த இரத்ததான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டதாக  காரைதீவு விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி பந்துல பெர்னாண்டோ தமிழ் மிரருக்கு தெரிவித்தார்.

alt

alt

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .