2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான தமிழ் மொழி மூல பயிற்சி

Super User   / 2010 ஒக்டோபர் 11 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் உத்தியோஸ்தர்களாகவும் அலுவலகர்களாகவும் தவிசாளர்களாகவும் கடமை புரிபவர்களின் நன்மை கருதிஉள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான தமிழ் மொழி மூல பயிற்சி  நெறியொன்றினை நடத்த கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

திருகோணமலை முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்களத்திலும், மட்டக்களப்பு பிராந்திய உள்லூராட்சி உதவி ஆணையாளர்  அலுவலகத்திலும் இடம்பெறவுள்ள இப்பாடநெறி ஒரு வருட கால எல்லையை கொண்டதாக வார இறுதி நாட்களில் நடத்தப்படவுள்ளது.

இலங்கை உள்ளூர் ஆளகை நிறுவனம் தமிழ் மொழி மூலம் முதன் முறையாக ஆரம்பிக்கவுள்ள இப்பாடநெறியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தமது விண்ணப்பப் படிவங்களை கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு பணிப்பாளர் வீ திவாகர சர்மா தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .