2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையில் இரு பிரதேச செயலகப் பிரிவுகளை மஹாவலி வலயத்திற்குள் உள்ளடக்க முயற்சி

Kogilavani   / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்டத்திலுள்ள இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளை மகாவலி வலயத்திற்குள் உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகளை அரச உடமைகள் மற்றும் வர்த்தக முயற்சி அமைச்சர் பி.தயாரட்ன மேற்கொண்டு வருகின்றார்.

அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமான மகாஓய மற்றும் பதியத்தலாவ பிரதேச செயலகப்பிரிவுகளை மகாவலி வலயத்திற்குள் உள்ளடக்குவதால் தற்போது இப்பிரதேசங்களில் எதிர்நோக்கும் பலவிதமான அடிப்படை பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுவதுடன் துரிதகதியில் அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியும் என அமைச்சர் பி.தயாரட்ன தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

அதிகளவில் விவசாயத்தையே ஜீவனோபாய தொழிலாக மேற்கொள்ளும் இவ்விரு பிரதேச செயலகங்களையும் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது பயங்கரவாத நடவடிக்கைகளினால் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகி பாதிப்படைந்து வந்துள்ளனர்.

இதனால் அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் நடைபெற்ற பல அபிவிருத்தித் திட்டங்களை இவ்விரு பிரதேச செயலகப்பிரிவுகளில் மேற்கொள்ள முடியாமல் போனதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .